உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் இறந்து கிடந்த பெண்

ஆற்றில் இறந்து கிடந்த பெண்

அரியாங்குப்பம்: ஆற்றில் அடையாளம் தெரியாத மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிேஷகப்பாக்கம் அடுத்த டி.என்., பாளையம் மலட்டாறில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க பெண் நேற்று மாலை 4:30 மணியளவில் தண்ணீரில் இறந்து கிடந்தார். ஆற்றின் கரையில், பையில், புடவைகள் உள்ளிட்ட துணிகள் இருந்தது. தகவறிந்த தவளக்குப்பம் போலீசார், உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஆற்றில், குளிப்பதற்கு இறங்கும்போது, தண்ணீல் மூழ்கி இறந்தாரா அல்லது குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டார என, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி