மேலும் செய்திகள்
வாலிபர் மாயம்
11-Nov-2024
நெட்டப்பாக்கம்; நெட்டப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெட்டப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி 41, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில் வரலட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது கணவர், வரலட்சுமியிடம் விவகாரத்து பெற்று இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Nov-2024