உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை அங்காடி திறப்பு விழா

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை அங்காடி திறப்பு விழா

புதுச்சேரி: மடுகரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை அங்காடியை அமைச்சர் ராஜவேலு திறந்து வைத்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதி, மடுகரை, நெட்டப்பாக்கம், கல்மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனை அங்காடி அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி தலைமை தாங்கினார். விரிவாக்க அதிகாரி சவுரிராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு சுய உதவிக்குழு விற்பனை அங்காடியை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் தனபூபதி உள்பட திட்ட பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனர். இந்த அங்காடியில் மகளிர் கூட்டமைப்பின் சார்பாக உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்கள், உணவு பொருட்கள், கைவினை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என, சுயஉதவிக்குழு பெண்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி