பட்டதாரி ஆசிரியர்கள் 10 பேருக்கு பணி ஆணை
புதுச்சேரி: காத்திருப்போர் பட்டியலில் இருந்த 10 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, நியமண ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி பள்ளிக்கல்வி துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 193 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், 180 நபர்களுக்கு கடந்த மார்ச் 29ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள காலி பணியிடங்களில், 10 தகுதிவாய்ந்த நபர்களுக்கு காத்திருப்பு பட்டியல் இருந்து, பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் உடனிருந்தனர்.