உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி தொழிலாளி பலி

பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு புது தெருவை சேர்ந்தவர் பக்கிரி, 60; கூலி தொழிலாளி. இவர் நேற்று (நவ.,17) இரவு பாகூர் – கரிக்கலாம்பாக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அரங்கனுார் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (நவ.,18) இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை