உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

காரைக்கால்: சேலம் பகுதியை சேர்ந்த ராஜா, 52; இவர் திருநள்ளார் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்துவந்தார். இவர் நேற்று மது போதையில் இருந்தபோது திருநள்ளாறு பிரதான சாலையில் உள்ள நுாலாறு வாய்க்கால் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருநள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ராஜா உடலை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி