தொழிலாளி தற்கொலை
பாகூர்: தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த கரையாம்புத்துார் பெரிய பேட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 50; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜவள்ளி சில ஆண்டுகளுக்கு முன், இறந்ததால், லட்சுமணன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் அனைவரும் படுத்து துாங்கினர். மறுநாள் காலை பார்த்தபோது, லட்சுமணனை காணவில்லை. தேடியபோது, குளியல் அறையில் லட்சுமணன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கரையாம்புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.