உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக தரச் சான்றிதழ் அரசு பள்ளிக்கு வழங்கல்

உலக தரச் சான்றிதழ் அரசு பள்ளிக்கு வழங்கல்

புதுச்சேரி, : மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலை பள்ளிக்கு, உலக தரச் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர் நிலைப்பள்ளி, (ஐ.எஸ்.ஓ) உலகத் தரச் சான்றிதழ் பெற்ற பள்ளியாக உருவெடுத்துள்ளது. அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பள்ளிக்கு உலகத் தரச் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நேர்மை வணிகம், கணித ஆய்வகம், திறந்தவெளி நுாலகம், கியூ.ஆர். குறியீடு மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் எனது பள்ளி ஆகியவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின், பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. இதில், ரமேஷ் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இயக்குநர் அமன் சர்மா, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளித் தலைமை ஆசிரியர் நிலை- பாஸ்கரராசு, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை