உலக சுற்றுச்சூழல் தின விழா
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.தலைமை ஆசிரியர் ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியை கலைவாணி தொகுத்து வழங்கினார். காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை குறித்து பேசினார்.தொடர்ந்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, வளர்ப்பது மற்றும் பராமரிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாலசங்கர், வெங்கடேசன், ருக்குமணி, உதய பானு, கலைவாணி, விஜயலட்சுமி, சுகுணா, கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.