உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக இதய தினம் விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினம் விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: உலக இதய தினத்தையொட்டி, இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடந்த பேரணியை, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், துவக்கி வைத்தார். தொடர்ந்து, (பிளாஷ் மாப்' ) நடன மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்படும் நபர் ஒருவருக்கு திடீரென இதய இயக்கம் நிற்பது போலவும் உடனே அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு 'சி.பி.ஆர்' முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று செய்து காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !