உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக தொழில்முறை சிகிச்சை தினம் 

உலக தொழில்முறை சிகிச்சை தினம் 

புதுச்சேரி: ஜிப்மரில் உலக தொழில்முறை சிகிச்சை தினம் கடைபிடிக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறையின் தொழில்முறை சிகிச்சைப் பிரிவில் தொழில்முறை மருத்துவ செயல்பாடுகள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தொழில்முறை சிகிச்சை தினம் கடைபிடிக்கப்பட்டது. டாக்டர் சத்தீஷ்குமார் சிறப்புரையாற்றினார். அனைத்து வயதினரும் அவர்கள் விரும்பும் அல்லது அன்றாட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையை பிறரின் துணையின்றி வாழ்வதற்கு நாம் உதவ வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது ஜிப்மர் கண்காணிப்பாளர் வினோத் குமார், புனர்வாழ்வுத் துறையில் தொழில்முறை சிகிச்சைக்கான பங்களிப்பு குறித்து விவரித்தார். இது தொடர்பான காணொலி காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. நவம்பர் 26 வரை ஒரு மாதகாலத்திற்கு பல்வேறு துறைகளில் தொழில்முறை சிகிச்சை தொடர்பான சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை