உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பொது மருத்துவமனையில் உலக பார்வை தினம்

அரசு பொது மருத்துவமனையில் உலக பார்வை தினம்

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு பயிற்சி நிறுவனத்தின் கண் நோய் துறை மற்றும் தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் சார்பில் 21வது உலக பார்வை தின விழா நேற்று நடந்தது. விழாவை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்து, கண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். கண் நோய் துறைத் தலைவர் தணிகாச்சலம் வரவேற்றார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷ் வர்தன் ஷர்மா, குறைதீர் அதிகாரி ரவி முன்னிலை வகித்தனர். ஜிப்மர் கண் நோய் பேராசிரியர் சுபாஷினி 'அன்றாட வாழ்வில் பார்வையின் அவசியம்' தலைப்பிலும், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி கண் நோய் பேராசிரியர் கலைச்செல்வி 'கண்களுக்கான பாதிப்புகளை தவிர்த்தல்' தலைப்பில் கருத்துரை வழங்கினர். இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணை மருத்துவ பயிற்சியாளர்கள், மாணவர்கள், ஆப்டோமெட்ரி மாணவர்கள், செவிலியர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 'உங்கள் கண்களை நேசியுங்கள்' என்ற தலைப்பில் சுலோகன் மற்றும் புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர்கள் செந்தமிழன் ரெனே, அஷ்வினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். டாக்டர் மலர்மொழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை