உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியற் புலத்தில் எழுத்தாளர் கி.ரா., அறக்கட்டளை சொற்பொழிவு

புதுச்சேரி பல்கலைக்கழக தமிழியற் புலத்தில் எழுத்தாளர் கி.ரா., அறக்கட்டளை சொற்பொழிவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்ரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் எழுத்தாளர் ராஜநாராயணனின் 102வது பிறந்த நாளையொட்டி, இரண்டாவது அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு நடந்தது. தமிழியற் புலத் துறைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் இளவேனில் நோக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்து, தமிழியற்புல முதன்மையர் சுடலைமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் செல்வராசு எழுதிய ஏழாம் வீரபத்திரன் எனும் குறும் புதின நுால் வெளியிடப்பட்டது. பல்கலைக் கழக சமூக அறிவியல் புல முதன்மையர் சந்திரிகா,நுாலை வெளியிட முதற்படியை எழுத்தாளர் துளசி பாக்கியவதி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பிரெஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகருக்கு ராஜ நாராயணன் இலக்கிய விருது வழங்கப்பட்டது. சுப்ரமணிய பாரதியார் இருக்கையின் பொறுப்பு பேராசிரியர் ரவிக்குமார், அறிமுக உரையாற்றினார். விருதைப் பெற்றுக் கொண்ட வெங்கட சுப்புராய நாயகர் ஏற்புரையாற்றினார். மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன், முனைவர் சிலம்பு செல்வராசு வாழ்த்திப் பேசினர்.தொடர்ந்து நடந்த அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவில் கி.ராஜநாராயணன் சிறுகதைகள் பற்றி கவிஞர் சபரிநாதன் சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழியற் புலம், பிற துறை பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், முதுகலை, இளங்கலை தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை