உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை காலி பணியிடங்களுக்கு நாளை எழுத்து தேர்வு

மின்துறை காலி பணியிடங்களுக்கு நாளை எழுத்து தேர்வு

புதுச்சேரி :மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கிறது.புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் மின் துறையில் இளநிலை பொறியாளர் (மின்சாரம்) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை 8ம் தேதி 5 தேர்வு மையங்களில் நடக்கிறது.இத்தேர்வின் முதல் தாள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2:30 மணி முதல் 4:30 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை 1,902 தேர்வர்கள் எழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அந்தந்த தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும். நுழைவுச் சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பம் இட்டு எடுத்து வரவேண்டும். நுழைவு சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி பான் கார்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச் சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். மற்ற பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. இதுவரை நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் https://recruitment.py.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0413-2233336 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ