உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘யாதுமாகி’ ஓவிய கண்காட்சி

‘யாதுமாகி’ ஓவிய கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி, பாரதியார் பல்கலைக் கூடம், சோழர் பட்டறை கலைக்கூடம் சார்பில் ஓவியக் கண்காட்சி ஈஸ்வரன் கோவில் வீதியில் நடந்து வருகிறது. ‘யாதுமாகி’ தலைப்பில் நடக்கும் ஓவியக் கண்காட்சியை அமைச்சர் ராஜவேலு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கலை பண்பாட்டு துறை செயலர் சுரேந்தர், பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கண்காட்சியில், பிரபல ஓவியர் பெனிதா பெர்சியாலின் ஓவிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரதியார் பல்கலைக் கூட பேராசிரியர்கள், மாணவர்கள் ஓவியங்களை பார்வையிட்டனர். கடந்த 27ம் தேதி துவங்கி வரும் 7ம் தேதி வரை நடக்கும் ஓவிய கண்காட்சியை காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ