உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜை துவங்கியது

கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜை துவங்கியது

புதுச்சேரி : சாரம், கெங்கைமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. புதுச்சேரி சாரத்தில் அமைந்துள்ள கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி, நாளை 5ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. இதற்கான பூஜை கடந்த 1ம் தேதி மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் 2ம் தேதி நவக்கிரக ேஹாமம், மிருச்சாங்கிரஹணம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, தீபாராதனை நடந்தது. நேற்று 3ம் தேதி காலை மூர்த்தி ேஹாமம், ஸம்ஹீதா ேஹாமம், திசா ேஹாமம், சாந்தி ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. மாலை முதல்கால யாக பூஜை மங்கள இசையை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து புண்யாஹாவாசனம், அங்குராப்பனம், ரக்ஷபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி தீபராாதனை நடந்தது.இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 3ம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 5ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து காலைே 7:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, 8 மணிக்கு கெங்கைமுத்து மாரியம்மன் கோவி்ல மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து பால விநாயகர், பாலமுருகன் மற்றும் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிேஷகத்தை தொடர்ந்து மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை