உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை

 ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் 125 நாட்கள் பணி நடக்கும் இடத்தை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார். அப்போது கவர்னர் அங்கு 125 நாள் வேலைத் திட்ட பணிகளை செய்வோரிடம் கலந்துரையாடினார். கவர்னர்; வேலை செய்தால் எவ்வளவு கூலி கிடைக்கும், எத்தனை நாட்கள் வேலை கொடுக்கிறார்கள், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளீர்களா. அங்கு வேலை செய்த பெண்கள்; வேலை செய்தால் தினமும் 300 ரூபாய் கிடைக்கும். கடந்த வருடம் 30 நாட்கள் தான் வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலை தருவதாக கூறுகின்றனர். ஆனால் கொடுப்பதில்லை. ஏ.டி.எம்., கார்டு இருந்தா பிள்ளைங்க எடுத்துக்குவாங்க. கவர்னர்; வருஷத்துக்கு வேலை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும். பெண்கள்; 10 முதல் 14 ஆயிரம் வரை கிடைக்கும். தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அதனால் ஆண்டு முழுதும் வேலை வேண்டும். கவர்னர்: அரிசி இலவசமாக கொடுக்கிறார்களாக. பெண்கள்: கடந்த நான்கு ஆண்டுகள் போடவில்லை. பிறகு 3 மாதங்கள் கொடுத்தனர். அதன்பிற்கு ஆறு மாதம் போடவில்லை. தற்போது போடுகின்றனர். மாதந்தோறும் கரெக்ட்டா அரிசி கொடுங்க. பின், கவர்னர் கூறுகையில், 'மக்கள் கோரிக்கையை ஆராய்வோம். 125 நாட்கள் புது திட்டம். இது மக்களுக்கு நல்ல திட்டம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை