உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீதிமன்ற வளாகத்தில் யோகா தின நிகழ்ச்சி

நீதிமன்ற வளாகத்தில் யோகா தின நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இலவச சட்ட உதவி ஆணையம், நீதித்துறை சார்பில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, யோகாசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை