உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கடற்கரையில் யோகா திருவிழா; மாணவர்கள், கலைஞர்கள் பங்கேற்பு

புதுச்சேரி கடற்கரையில் யோகா திருவிழா; மாணவர்கள், கலைஞர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உலக யோகா திருவிழாவை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.புதுச்சேரி கடற்கரையில், காந்தி திடலில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத்துறை சார்பில், யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மாலை நடந்த உலக யோகா திருவிழாவை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் ராஜிவ்வர்மா, பிரெஞ்சி துாதர் லிசே தால்பொத்பரி, அரசு செயலர் மணிகண்டன் உட்பட சுற்றுலாத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த யோகா திருவிழாவில், மாணவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து யோகா பயிற்சி பெற்ற கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு, யோகாவில் உள்ள பல்வேறு கலைகளை செய்து காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்