உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவரை முட்டிபோட வைத்து தாக்கிய வாலிபர் கைது

மாணவரை முட்டிபோட வைத்து தாக்கிய வாலிபர் கைது

புதுச்சேரி: மாணவரை முட்டிபோட வைத்து தாக்கும் வீடியோ வைரல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, தேரோடும் வீதியைச் சேர்ந்தவர் யுவன்ராஜ், 18; மதகடிப்பட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த தனது நண்பர்களைச் சந்திக்க செல்வது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இரவு தனது நண்பர்கள் கோவிந்தன், தினேஷ், நவீன் ஜோசப், ராகுல், மிதுன், பிரஜன் ஆகியோருடன் பேசிய கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த சுப்பையா நகரை சேர்ந்த வில்லியனுார் தனியார் கல்லுாரியில் பயிலும் விமல், 20; என்பவரை யுவன்ராஜ் தவறாக பேசினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், யுவன்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபம் அடங்காத விமல், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி மாலையில் யுவன்ராஜ் வீட்டிற்கு சென்று, அவரை தனது பைக்கில் அமரவைத்து கம்பளி சாமி தோப்பு பகுதிக்கு அழைத்து வந்து, விமல் அவரது அண்ணன் நிர்மல், 23; மற்றும் கல்லுாரி நண்பர்களுடன் இணைந்து யுவன்ராஜை முட்டிபோட வைத்து, திட்டி, தடியால் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து யுவன்ராஜ் நேற்று முன்தினம் டி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், விமல், நிர்மல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த போலீசார் நிர்மலை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை