உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் மது பாட்டிலால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.காரைக்கால் அருளபிள்ளைத் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினேஷ், 25; வெல்டிங் வேலை செய்து வருகிறார்.இவரது தந்தை ராமமூர்த்தி குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணா நகரை சேர்ந்த சிரஞ்சீவி, 24 ;என்பவர் குடிபோதையில் ராமமூர்த்தியை ஆபாசமாக பேசி மது பாட்டிலால் தலையில் தாக்கியதில் ராமமூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, சிரஞ்சீவி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !