உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி, சாமிப்பிள்ளைத் தோட்டம் வாராகி அம்மன் கோவில் அருகில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர் கருவடிக்குப்பத்தை சேர்ந்த நாராயணன் 29, என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !