உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

காரைக்கால்: நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அடுத்த பொரவச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் 29 வயது பெண். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார். இதனிடையே ஆலங்குடியைச் சேர்ந்த வினோத், 30, என்பவருடன் அப்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்ததால், அப்பெண் ஏழு மாத கர்ப்பமாக உள்ளர். இதனையறிந்த வினோத், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் வினோத்தை வைக்க கோரி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வினோத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை