மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது
28-Oct-2026
பாகூர்: பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,30) ரோந்து சென்றனர். பாகூர் மாஞ்சாலை சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பாகூர் வேதபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் 18; என்பதும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பைக் ஷோரும் உரிமையாளரான பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தலைமறைவாக இருந்து வருவதும் தெரிய வந்தது. அவரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 55 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இன்று (அக்.,31) சிறையில் அடைத்தனர்.
28-Oct-2026