உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

திருக்கனுார் : திருக்கனுாரில் மோட்டார் பைக் திருடியவரைகைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3பைக்குகள், ஒரு ஸ்கூட்டியைபறிமுதல் செய்தனர்.மண்ணாடிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 43; கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர். இவர், கடந்த 21ம் தேதி மணலிப்பட்டு சாராயக்கடை அருகே நிறுத்தி இருந்த தனது பைக்கை காணவில்லை என திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், விழுப்புரம் மாவட்டம், மரகதப்புரம், வளையல்காரன் தெருவை சேர்ந்த சரத்குமார், 29;பைக்கை திருடியது தெரியவந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் எஸ்.பி., கிரைம் போலீசார்,மதகடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த சரத்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.விசாரணையில், அவர், மணலிப்பட்டில்ஒரு பைக், சேதராப்பட்டில் ஒரு ஸ்கூட்டி, ரெட்டியார்பாளையம் பகுதியில் 2 பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர், பதுக்கி வைத்திருந்த 3 பைக்குகள், ஒரு ஸ்கூட்டி மற்றும் 2 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், சரத்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் மொபைல் போன் மற்றும் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ