மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி : ரவுடி பெயரில் நகை கடை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; பாரதி வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் பகுதி 3 கடைகளால் பிரித்து வாடகை விட்டுள்ளார். கடந்த 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, ரமேஷ் மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் மர்டர் மணிகண்டன் எனவும், என்னுடைய ஆள் வீட்டு அருகில் நிற்கிறார். அவர்கள் வந்து உன்னை பார்ப்பார்கள். அவர்களிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து அனுப்பு என கூறியுள்ளார். ஏன் கொடுக்க வேண்டும் என ரமேஷ் கேட்டார். அதற்கு, ஏன் சம்பவம் செய்தால் தான் கொடுப்பீர்களா என கூறிவிட்டு மொபைல்போனை அனைத்து விட்டார். ரமேஷ் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரமேசை தொடர்பு கொண்ட மொபைல் நம்பர் யாருடையது என விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்தது உழவர்கரை, அருந்ததி நகரைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் பிரசாந்த் (எ) ஜெமினி, 23; என தெரியவந்தது. இவர், ரமேஷ் வீட்டின் கீழ் உள்ள வாடகை கடையில் இயங்கிய ஸ்கிரின் பிரிண்டிங் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஸ்கிரீன் பிரிண்டிங் கடை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடையில் வேலை செய்தபோது, வீட்டின் உரிமையாளரான ரமேஷிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த பிரசாந்த், ரவுடி பெயரில் மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் தனது நண்பர் மூலம் கிடைத்த மொபைல்போன் மூலம் நகை கடை உரிமையாளர் ரமேசை தொடர்பு கொண்டு ரவுடி மர்டர் மணிகண்டன் பேசுவதாக கூறி மிரட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரசாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago