மேலும் செய்திகள்
கத்தியுன் திரிந்த வாலிபர் கைது
11-Nov-2024
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
29-Oct-2024
அரியாங்குப்பம்: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய, கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில், ஒருவர் கத்தியை காட்டி, பொது மக்களை மிரட்டி வருவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், குற்றப்பிரிவு போலீசார் வசந்த் ஆகியோர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த கவுதம், 24, என தெரியவந்தது. அவர் மீது உருளையன்பேட்டை போலீசில், கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல், செய்தனர். கோர்ட்டில், ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
11-Nov-2024
29-Oct-2024