மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
10-Mar-2025
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
10-Mar-2025
புதுச்சேரி : கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டுவதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.அதனை அடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சாந்தி நகரை சேர்ந்த விஜய், 27, என தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
10-Mar-2025
10-Mar-2025