மேலும் செய்திகள்
மாணவி மாயம்
31-Mar-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகபாண்டி,24; இவர் 16 வயது சிறுமியிடம் மொபைல் எண்ணை கேட்டுள்ளார். சிறுமி தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகபாண்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார். தட்டிகேட்ட சிறுமியினர் உறவினர்களை மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார், சண்முகபாண்டி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
31-Mar-2025