உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறில் வாலிபர் மீது தாக்குதல்:இருவருக்கு வலை

தகராறில் வாலிபர் மீது தாக்குதல்:இருவருக்கு வலை

காரைக்கால்.அக்.27 -: காரைக்காலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கம்பியால் குத்திய இருவரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் மேலகாசாகுடி தென்பாதி தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் கவுதமன், 22 ;இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்தவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு டி.ஜே., இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது துணை கலெக்டர் வருகையை முன்னிட்டு டி.ஜே., நிகழ்ச்சியை நிறுத்துமாறு கவுதமனின் தந்தை கூறினார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் ரவிக்குமாரிடம் தகராறு ஏற்பட்டது. ட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுதில் இருவரும் கவுதமன் வீட்டிற்குச் சென்று கம்பி போன்ற கூர்மையான ஆயுத்தால் கவுதமனின் இடது புருவத்தில் குத்தினர். இதில் காயமடைந்த கவுதமன் நெடுங்காடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், நெடுங்காடு போலீசார் சஞ்சய், சுதில் ஆகியோர்மீது வழக்குப் பதிந்து பதிந்து விசாரித்த வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ