வாலிபர் தற்கொலை
புதுச்சேரி : கடன் பிரச்னையால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கணபதி செட்டிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ், 31, இவர், ஓட்டல் கடை நடத்தி வந்தார். அதற்காக வெளியில் கடன் வாங்கியிருந்தார். ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், டிரைவர் வேலை செய்தார். கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்தனர்.இந்நிலையில், அவரது தாய் வேலைக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.