உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இந்தியாவுக்கு 2 தங்கம்: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

இந்தியாவுக்கு 2 தங்கம்: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்

செங்டு: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்தது.சீனாவின் செங்டு நகரில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (15, 17 வயது) நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு (17 வயது) பைனலில் இந்தியாவின் லக்சயா, திக் ஷா மோதினர். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய திக் ஷா 21-16, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பத்தை தட்டிச் சென்றார். லக்சயா வெள்ளி வென்றார். இப்பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் திக் ஷா.பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) பைனலில் இந்தியாவின் ஷைனா, ஜப்பானின் சிஹாரு டோமிடா மோதினர். இதில் அசத்திய ஷைனா 21-14, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். இப்பிரிவில் தங்கம் வென்ற 4வது இந்திய வீராங்கனையானார் ஷைனா.இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 2013ல், 2 தங்கம் மட்டும் கிடைத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை