மேலும் செய்திகள்
அரையிறுதியில் சதிஷ் குமார்
06-Dec-2024
கவுகாத்தி: கவுகாத்தி பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் சதிஷ் குமார், அன்மோல் கார்ப் முன்னேறினர்.அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், சீனாவின் ஜெங் ஜிங் வாங் மோதினர். முதல் செட்டை 13-21 என இழந்த சதிஷ் குமார், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-14 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தினார். முடிவில் சதிஷ் குமார் 13-21, 21-14, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், மான்சி சிங் மோதினர். அபாரமாக ஆடிய அன்மோல் 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-14, 21-14 என சீனாவின் ஷு லியாங் கெங், டிங் கே வாங் ஜோடியை வீழ்த்தியது.கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 22-24, 11-21 என சீனாவின் ஹன் யு ஜாங், லி ஜிங் பாவோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.
06-Dec-2024