உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், உன்னதி ஹூடா, கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.லக்னோவில், சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஆகர்ஷி காஷ்யப் மோதினர். இதில் உன்னதி 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-5, 21-19 என சகவீராங்கனை அஷ்மிதாவை வென்றார்.மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ, மான்சி சிங், தன்யா ஹேம்நாத், இஷாராணி, தேவிகா சிஹாக், அனுபமா, தஸ்னிம் மிர் வெற்றி பெற்றனர்.ஸ்ரீகாந்த் அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், கவின் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 21-15, 21-10 என சகவீரர் ஷஸ்வத் தலாலை தோற்கடித்தார்.மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், அலாப் மிஸ்ரா, பிரியான்ஷு ரஜாவத், தருண், மன்ராஜ் சிங் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ