மேலும் செய்திகள்
காலிறுதியில் லக்சயா
30-Oct-2025
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா, பிரனாய் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தைவானின் லீ யங் சூவை சந்தித்தார். இதில் லக்சயா 21-17, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் யோகானெசை எதிர்கொண்டார். இதில் பிரனாய், 6-21, 21-12, 21-17 என போராடி வெற்றி பெற்றார்.இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, 21-13, 17-21, 21-19 என்ற கணக்கில், டென்மார்க்கின் ஜோஹன்னெசனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஆயுஷ், 21-11, 21-15 என்ற நேர் செட்டில் கனடாவின் யுவான் சாமை வென்றார். இந்திய 'சீனியர்' வீரர் ஸ்ரீகாந்த், 21-19, 19-21, 21-15 என தைவானின் சியா லீயை வீழ்த்தினார். இந்தியாவின் கிரண், 21-11, 22-24, 17-21 என ஜப்பானின் நிஷிமோட்டோவிடம் தோல்வியடைந்தார்.
30-Oct-2025