மேலும் செய்திகள்
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
20 hour(s) ago
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் பிரனாய், 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பிரனாய், 3 இடம் பின்தங்கி, 13வது இடம் பிடித்தார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், தரவரிசையில் 8வது இடத்துக்கு முன்னேறினார்.இந்த ஆண்டு பங்கேற்ற 10 தொடரில், இந்தியா ஓபனில் மட்டும் அரையிறுதிக்கு முன்னேறினார். சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் காலிறுதியில் வீழ்ந்தார். இதையடுத்து 'டாப்-10' பட்டியலில் இருந்து வெளியேற நேர்ந்தது. மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், 'நம்பர்-14' இடத்தில் உள்ளார்.பெண்கள் ஒற்றையரில் சிந்து, 12வது இடத்தில் உள்ளார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி-தனிஷா ஜோடி, ஒரு இடம் பின்தங்கி 20 வதாக உள்ளது. 24வது இடத்தில் திரீஷா-காயத்ரி ஜோடி பின்தங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர்-3' இடம் பிடித்துள்ளது.
20 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025