உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இந்திய ஜோடி நம்பர்-11 * பாட்மின்டன் தரவரிசையில்

இந்திய ஜோடி நம்பர்-11 * பாட்மின்டன் தரவரிசையில்

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் முதன் முறையாக 11வது இடம் பிடித்தது திரீசா-காயத்ரி ஜோடி.சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி, முதன் முறையாக 11வது இடம் பிடித்தது. இந்தியாவில் நடந்த சையது மோடி தொடரில் கோப்பை வென்ற இந்த ஜோடி, சமீபத்தில் உலக டூர் பாட்மின்டனில் சிறப்பாக செயல்பட்டது. 'நம்பர்-6' ஆக இருந்த மலேசிய ஜோடியை வீழ்த்தியது. 'நம்பர்-1' ஜோடிக்கு எதிராக போராடியது. இதையடுத்து இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அஷ்வினி-தனிஷா ஜோடி, 16வதாக உள்ளது.சிந்து 'நம்பர்-15'சையது தொடரில் கோப்பை கைப்பற்றிய இந்தியாவின் சிந்து, ஒற்றையர் பிரிவில் 15வது இடத்துக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 12வது இடத்தில் தொடர்கிறார். பிரனாய் (26), பிரியான்ஷு (34), கிரண் ஜார்ஜ் (38) பின் தங்கினர்.பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிக தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ