உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / கவுகாத்தி பாட்மின்டன்: சபாஷ் சன்ஸ்கர்

கவுகாத்தி பாட்மின்டன்: சபாஷ் சன்ஸ்கர்

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் சன்ஸ்கர் சரஸ்வத் சாம்பியன் பட்டம் வென்றார்.அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 27, சன்ஸ்கர் சரஸ்வத் 19, மோதினர். மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ராஜஸ்தானின் சன்ஸ்கர் 21-11, 17-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன்முறையாக சாம்பியன் ஆனார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், 16 வயதான இந்தியாவின் தான்வி சர்மா 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் சியோ-டோங் துங்கிடம் 24, தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய், சாய் பிரதீக் ஜோடி 13-21, 18-21 என, மலேசியாவின் காய் ஜிங் காங், ஆரோன் டாய் ஜோடியிடம் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி