உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இந்திய ஜோடி ஏமாற்றம்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்

இந்திய ஜோடி ஏமாற்றம்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் திரீசா-காயத்ரி, சுமீத்-சிக்கி ரெட்டி ஜோடிகள் தோல்வியடைந்தன.டென்மார்க்கில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி, மலேசியாவின் பியர்லி டான், தினாஹ் முரளிதரன் ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய காயத்ரி, திரீசா ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 22-20, 19-21, 22-24 என கனடாவின் கெவின் லீ, இலியானா ஜாங் ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், சீனதைபேயின் சு லீ யங் மோதினர். இதில் சதிஷ் குமார் 15-21, 21-17, 20-22 என தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை