மேலும் செய்திகள்
கொரிய பாட்மின்டன்: கிரண் ஜார்ஜ் வெற்றி
06-Nov-2024
குமாமோட்டோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் சிந்து, கனடாவின் மிச்செல் லி மோதினர். முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 16-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 17-21 எனக் கோட்டைவிட்டார்.ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 21-17, 16-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
06-Nov-2024