ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் தான்வி
கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, உன்னதி ஹூடா, ஞான தத்து முன்னேறினர்.அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் லி யுவான் சன் மோதினர். அபாரமாக ஆடிய தான்வி 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 15-10, 15-7 என மலேசியாவின் கரேன் டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 11-15, 9-15 என, இலங்கையின் ரணித்மா லியானகேவிடம் தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் ஞான தத்து, அமெரிக்காவின் காரெட் டான் மோதினர். இதில் அசத்திய ஞான தத்து 15-12, 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.கலப்பு இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா ஜோடி 12-15, 15-11, 15-12 என்ற கணக்கில் பிரான்சின் திபோட்ஸ் கார்டன், அகதே குவேஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.