உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / ஒடிசா பாட்மின்டன்: காலிறுதியில் சதிஷ் குமார்

ஒடிசா பாட்மின்டன்: காலிறுதியில் சதிஷ் குமார்

கட்டாக்: ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், அன்மோல் கார்ப் முன்னேறினர்.ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ரகு மாரிசாமி மோதினர். அபாரமாக ஆடிய சதிஷ் குமார் 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-16 என சீனாவின் ஜுவான் சென் சூவை வீழ்த்தினார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் தருண், அபிஷேக் சைனி, ரித்விக் சஞ்ஜீவ் வெற்றி பெற்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப், அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வால் மோதினர். அபாரமாக ஆடிய அன்மோல் 15-21, 21-13, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 15-21, 21-15, 21-17 என ஹாங்காங்கின் சலோனி சமிர்பாய் மேத்தாவை வீழ்த்தினார்.மற்ற போட்டிகளில் ஸ்ரீயான்ஷி, ரக் ஷிதா ஸ்ரீ வெற்றி பெற்றனர். இந்தியாவின் தஸ்னிம் மிர், இரா சர்மா, தாரா ஷா தோல்வியடைந்தனர்.கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன்-ஆத்யா, ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, சாத்விக் ரெட்டி-வைஷ்ணவி ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி