உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பைனலில் சாத்விக்-சிராக்: சீன பாட்மின்டனில் முன்னேற்றம்

பைனலில் சாத்விக்-சிராக்: சீன பாட்மின்டனில் முன்னேற்றம்

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-14 என தன்வசப்படுத்தியது.மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஜோடி, நடப்பு சீசனில் தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. சமீபத்தில் ஹாங்காங் ஓபனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ