உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இரண்டாவது சுற்றில் சிந்து * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் சிந்து * பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்...

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேறினர். பிரான்சின் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரின் 94வது சீசன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, கனடாவின் மிட்செல்லி லீயை எதிர்கொண்டார். முதல் செட்டை 20-22 என போராடி இழந்தார் சிந்து. அடுத்த செட்டும் இழுபறி ஆனது. இருப்பினும் சிந்து 22-20 என கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 20-22, 22-20, 21-19 என வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் அபாரம்ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், சீன தைபேவின் தியன் சென்னை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என வென்ற ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 20-22 என போராடி இழந்தார். மூன்றாவது செட்டில் அசத்திய இவர், 21-8 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-7' ஆக உள்ள இந்தியாவின் முன்னணி வீரர் பிரனாய், சீனாவின் லு குவாங்கை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 17-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ