உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / சிந்து, லக்சயா சென் சாம்பியன்: சையது மோடி பாட்மின்டனில்

சிந்து, லக்சயா சென் சாம்பியன்: சையது மோடி பாட்மின்டனில்

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றனர்.உ.பி., மாநிலம் லக்னோவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, சீனாவின் வு லுவோ யு மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே 2017, 2022ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். சர்வதேச அரங்கில் இரண்டு ஆண்டு, 4 மாதங்களுக்கு பின் சாம்பியன் ஆனார் சிந்து.லக்சயா அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் தே மோதினர். இதில் லக்சயா சென் 21-6, 21-7 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர, இத்தொடரின் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்ற 5வது இந்திய வீரரானார் லக்சயா சென்.காயத்ரி-திரிசா கலக்கல்: பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி 21-18, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் பாவோ லி ஜிங், லி கியான் ஜோடியை வீழ்த்தியது. இத்தொடரின் பெண்கள் இரட்டையரில் கோப்பை வென்ற முதல் இந்திய ஜோடியானது.ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் கிருஷ்ணமூர்த்தி ராய், சாய் பிரதீக் ஜோடி, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி தோல்வியடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை