உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

மலேசிய பாட்மின்டன் பைனல்: சிந்து ஏமாற்றம்

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பைனலில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார். கோலாலம்பூரில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-15' இந்தியாவின் சிந்து, 7வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 5-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 11-3 என முன்னிலை பெற்றிருந்த சிந்து, பின் 16-21 எனக் கோட்டைவிட்டார்.ஒரு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-16, 5-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சிந்து கூறுகையில், ''மலேசிய தொடரில் பட்டம் வெல்ல முடியாதது வருத்தம் அளித்தது. பைனல் வரை முன்னேறியது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jaganathan Ravichandran
மே 27, 2024 17:57

தேறாத சிந்து என்றா எழுதுவது… பைனல் போனதை பாராட்ட மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை… நாகரீகமாக எழுத பழகுங்கள்… ஒரு கண்ணியம் இருக்கிறது.. காற்றோடு பறக்க விடாதீர்கள்


shyamnats
மே 27, 2024 08:59

அரசியலில் எத்தனை எம் எல் ஏ, எம் பிக்கள் சரியாக செயல் படாத போதும் நாம் யாரும் மோசமாக விமரிசிப்பதில்லை என்பது யாவரும் அறிந்ததே.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி