உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / அரையிறுதியில் திரீசா-காயத்ரி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...

அரையிறுதியில் திரீசா-காயத்ரி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் திரீசா-காயத்ரி ஜோடி முன்னேறியது. சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் காலிறுதியில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-30' வது இடத்திலுள்ள இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, உலகின் 'நம்பர்-6', ஆல் இங்கிலாந்து தொடரின் நடப்பு சாம்பியன், தென் கொரியாவின் கிம் சோ இயாங், ஹாங் ஹீ யாங் ஜோடியை எதிர்கொண்டது.இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-2' ஜோடியை (தென் கொரியா) வென்ற நம்பிக்கையில் களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் செட்டை 18-21 என இழந்தது. இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 11-17 என பின்தங்கிய இந்திய ஜோடி, பின் தொடர்ந்து 5 'கேம்களை' கைப்பற்றியது. முடிவில் 21-19 என செட்டை வசப்படுத்தியது.மூன்றாவது, கடைசி செட் 19-19, 20-20, 21-21 என இழுபறியாக இருந்தது. கடைசி நேரத்தில் அடுத்தடுத்து இரு 'கேம்' கைப்பற்றிய இந்திய ஜோடி, 24-22 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 19 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் இந்திய ஜோடி 18-21, 21-19-24-22 என 'திரில்' வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ