உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பைனலில் ஸ்ரீகாந்த்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்

பைனலில் ஸ்ரீகாந்த்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்

புல்லெர்டன்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.அமெரிக்காவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுடாய் ஓகிமோட்டோ மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 22-20, 15-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ரவுனக் சவுகான், சீனதைபேயின் லி யங் சு மோதினர். இதில் ரவுனக் 17-21, 19-21 என தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சன் மோதினர். இதில் தேவிகா 21-15, 11-21, 15-21 என தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை