உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / முன்னிலை பெற்றது வங்கம்: மெஹிதி ஹசன் அரைசதம்

முன்னிலை பெற்றது வங்கம்: மெஹிதி ஹசன் அரைசதம்

மிர்பூர்: மெஹிதி ஹசன், ஜாக்கர் அலி அரைசதம் விளாச, வங்கதேச அணி முன்னிலை பெற்றது.வங்கதேசம் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மிர்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106, தென் ஆப்ரிக்கா 308 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 101/3 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரபாடா 'வேகத்தில்' மஹ்முதுல் ஹசன் ஜாய் (40), முஷ்பிகுர் ரஹிம் (33) வெளியேறினர். லிட்டன் தாஸ் (7) ஏமாற்றினார். பின் இணைந்த மெஹிதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி அரைசதம் கடந்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்த போது கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' ஜாக்கர் அலி (58) சிக்கினார்.வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 283 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. மெஹிதி ஹசன் (87), நயீம் ஹசன் (16) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 4, மஹாராஜ் 3 விக்கெட் சாய்த்தனர்.இரண்டாவது இன்னிங்சில் 81 ரன் முன்னிலை பெற்றுள்ள வங்கதேச அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை