உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வேகத்தில் அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்

வேகத்தில் அசத்திய அர்ஜுன்: 9 விக்கெட் சாய்த்தார்

ஆலுார்: உள்ளூர் போட்டியில் 'வேகத்தில்' அசத்திய அர்ஜுன் 9 விக்கெட் சாய்த்தார்.கர்நாடகாவின் ஆலுாரில், கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) சார்பில் உள்ளூர் போட்டி நடந்தது. இதில் கர்நாடகா, கோவா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கர்நாடகா அணி 103 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கோவா அணி சார்பில் இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன், 13 ஓவரில், 41 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.பின் அபினவ் தேஜ்ராணா (109) கைகொடுக்க கோவா அணி முதல் இன்னிங்சில் 413 ரன் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் கர்நாடகா அணி 121 ரன்னுக்கு சுருண்டது. 'வேகத்தில்' மிரட்டிய அர்ஜுன், 13.3 ஓவரில், 46 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். கோவா அணி இன்னிங்ஸ், 189 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு உதவிய அர்ஜுன், இதுவரை 13 முதல் தரம் (21 விக்கெட்), 15 'லிஸ்ட் ஏ' (21), 21 'டி-20' (26) போட்டிகளில் பங்கேற்று 68 விக்கெட் சாய்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ